நடிகை நயன்தாரா எப்போதும் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது விஜய்63, தர்பார் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் பூங்குழலி ரோலில் நடிக்கிறார் என முன்பு தகவல் பரவியது. ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனையால் நயன் விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக அந்த ரோலுக்கு நடிகை அனுஷ்காவை மணிரத்னம் தேர்ந்தெடுத்துள்ளாராம்.







