இந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தர்கள்.
அரசியலையும் தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஏறக்குறைய கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று மறைந்த மூன்று முதல்வர்களை தமிழ்நாட்டுக்கு கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா.
மேலும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா உறுப்பினர் எனப் பெரிய பட்டியல் இருக்கிறது. அப்படி அரசியலை புரட்டி போடும் சினிமாவின் நாயகர்கள் பல மணிநேரம் மக்களோடு மக்களாக நின்று வாக்குபதிவு செய்துள்ளனர்
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தான் படித்த பள்ளியிலேயே தனது வாக்கைச் செலுத்தியிருக்கிறார்.
”நான் எனது பள்ளியில் 41 ஆண்டுகளுக்கு முன்பு எந்த வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேனோ அதே இடத்தில் இன்று எனது வாக்கைச் செலுத்தினேன். மறக்க முடியாத நினைவுகளும், புதுப்பயணமும்” என பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
இதனை பார்த்த ஆதரவாளர்களும், ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். 41 ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
I got to VOTE in my school and in the very class room I sat 41 years ago ..NOSTALGIC.. a NEW JOURNEY.. a NEW HORIZON.. feeling blessed by LIFE. pic.twitter.com/CVWlZ7XOJv
— Prakash Raj (@prakashraaj) 18. April 2019