தான் சேகரித்து வைத்திருந்த ஆபாச டிவிடி கேசட்களை அழித்த பெற்றோர் மீது நஷ்டஈடு கேட்டு மகன் நீதிமன்றத்தில் வழக்கு

தான் சேகரித்து வைத்திருந்த ஆபாச டிவிடி கேசட்களை அழித்த பெற்றோர் மீது நஷ்டஈடு கேட்டு மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 2016-ல் அவர் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமான 10 மாதங்களில் மனைவியை விவாகரத்து செய்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

பின்னர் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்களை பிரிந்து வேறு இடத்துக்கு சென்ற இளைஞர் தனது பொருட்களை எல்லாம் உடன் எடுத்து சென்றார்.

புதிய வீட்டிற்கு சென்ற உடன் அங்கு அவர் கொண்டு வந்த பொருட்களில் 12 பெட்டிகளை காணவில்லை.

இது தொடர்பாக தனது பெற்றோர் மீது பொலிஸாரிடம் புகார் அளித்த நிலையில் புகாரை பொலிஸார் ஏற்கவில்லை.

பின்னர் தனது பெற்றோரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் தான் சேகரித்து வைத்திருந்த அரிய வகையிலான ஆபாச டிவிடிகள் மதிப்பு 29,000 டொலர்கள் மேலாக இருக்கும்.

அவற்றைத் தூக்கி எறிந்த தனது பெற்றோர்கள் 86,000 டொலர்களை தனக்கு இழப்பீடாக தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது மகனுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கமளித்துள்ள தந்தை,

“உன்னுடையை உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்காகவே நான் அவற்றை அழித்தேன். இதை என்றாவது ஒருநாள் நீ உணந்து கொள்வாய் என நம்புவதாக” தெரிவித்துள்ளார்.