10 ஆண்டுகளாக குழந்தையில்லை…. மனைவி எடுத்த அதிரடி முடிவு….

திருமணமாகி தம்பதிக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கணவரை மனைவி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என கணவர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஐசத். இவருக்கும் தனிம் என்ற ஆணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என ஐசத் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

என்னை என் கணவர் தனிம் நன்றாக கவனித்து கொண்டார், ஆனால் அவரை இனி என்னால் நேசிக்க முடியாது.

அவரை நான் காதலிக்க வில்லை, அதனால் எங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

அதே சமயம் தனிம் கூறுகையில், நான் என் மனைவியை இன்னும் நேசிக்கிறேன், அவளை விட்டு பிரியாமல் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.

ஐசித்தின் இந்த நிலைபாட்டை நான் மாற்ற நீதிமன்றம் அவகாசம் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து நீதிபதி கூறுகையில், திருமண வாழ்வில் பொறுமையும், புரிதலும் தம்பதிக்கு முக்கியம், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுங்கள்.

ஏப்ரல் 29ம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கபடுகிறது என தெரிவித்துள்ளார்.