பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பெருந்துயரம்.!

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவர் ஏற்கனவே இருகுழந்தைகள் உள்ளநிலையில் தனது மூன்றாவது பிரசவத்திற்காக ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கவிதாவின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

ஆனால் அவரது உடலில் மிகவும் குறைவான இரத்தம் இருந்ததால் மருத்துவர்கள் உடனடியாக கவிதாவை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே, பாதிவழியிலேயே கவிதா உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீ பாலாஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட தவறான சிகிச்சையாலே கவிதா உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.