உச்சத்துக்கு செல்லும் செந்தில் பாலாஜி.! வெளியாகிறது அறிவிப்பு.!

வரும் மக்களவை தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காலியாக உள்ள சட்டமன்றங்களில், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனையடுத்து இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கிடையே சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் கலியாகியது. இந்த நிலையில், நேற்று காலியாக உள்ள இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில், தினகரன் கட்சியில் இருந்து திமுகவிற்கு தாவிய செந்தில் பாலாஜி, திமுகவில் உடனடியாக பதவிகள் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்டது போலவே, அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தார்.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக சார்பாக களமிறக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக நம்ப தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அந்த தகுதியில் உள்ள முக்கிய திமுக நிர்வாகிகள் கடுப்பில் உள்ளதாகவும், நேற்று கட்சியில் இணைவர்களுக்கு எல்லாம் சீட்டா.. அப்போது காலம் காலமாக கட்சிக்கு உழைத்த எங்களுக்கு என்ன மரியாதையை கொடுக்கிறது தலைமை என்று குமுறி வருகின்றனராம்.