திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி கருப்பணன் (வயது 80). இவருடைய மகன் பெருமாள் (வயது 30), பெருமாள் வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றிவந்தும் தந்தையிடம் அடிக்கடி பணம் பெற்றும் இதில் கஞ்சா பழக்கம் வேறு.
போதை பழக்கத்துக்கு அடிமையான பெருமாள், வேலைக்கு செல்லாமல் தந்தையிடம் காசு பெற்று கஞ்சா புகைத்து வந்தார்.
நேற்றும் வழக்கம்போல கஞ்சா வாங்க தந்தையிடம் காசு கேட்டுள்ளார், கருப்பணன் காசு கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், அங்கு கிடந்த கட்டையை எடுத்து கருப்பணனை கொடூரமாக தாக்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் வலி தாங்காமல் சுருண்டு விழுந்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த அவரை பெருமாள் எழுப்பியுள்ளார்.பிறகு இறந்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்பணன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.