61 வயதில் தனது மகனின் குழந்தையை பெற்றெடுத்த பாட்டி!

அமெரிக்க மாநிலமான நெப்ராஸ்காவின் தலைநகர் ஓமஹாவை சேர்ந்தவர் மேத்யூ எலட்ஜ் . இவர் எலியட் டக்ஹெர்டி என்பவருடன் ஓரினச் சேர்க்கையாளராக இருந்துள்ளார்.

மேலும் மிகவும் நெருக்கமாக இருந்த அவர்களுக்கு குடும்பத்தினரும் ஆதரவாக இருந்துள்ளனர். மேலும் இந்நிலையில் தங்கள் உறவை மேலும் உறுதியாக்கி கொள்ளவும், தங்களின் வாழ்க்கையின் அடையாளமாக ஒரு குழந்தை வேண்டும் எனவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு குழந்தை பெற்று கொடுக்க 61 வயது நிறைந்த மேத்யூவின் அம்மா ரினெக் எலட்ஜ் முன்வந்துள்ளார்.பின்னர் அவருக்கு பல சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் மேத்யூவின் அம்மாவிற்கு கரு முட்டை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் எலியட்ஸின் சகோதரி லியா ரிப் என்பவன் கரு முட்டையை தானமாக வழங்கபட்டது.

மேலும் மேத்யூவின் விந்தணுக்களும் செயற்கையாக அவரது கருவில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு தற்போது அவர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.அதனை தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு ’உமா லூயிஸ்’ என பெயர் வைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.