சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறும் வீரர்!!

ஐபிஎல் போட்டியின் 12வது சீசன் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இதுவரை 16 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஹைதராபாத், பஞ்சாப், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. இதில், நடப்புக்கு சாம்பியனான சென்னை அணி முதலில் விளையாடிய 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது.

கடைசியாக மும்பை அணியுடன் நடந்த போட்டியில் சென்னை அணி தனது முதல் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, தனது சொந்த காரணங்களுக்காக சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

இந்நிலையில் சென்னை அணி ப்ராவோவை மட்டும் நம்பியிருந்த நிலையில் நேற்றைய போட்டியில் பிராவோவுக்கு காயம் ஏற்பட்டதால் வரும் சனிக்கிழமை பஞ்சாப்புடன் நடைபெறும் போட்டியில் பிராவோ பங்கேற்கமாட்டர் கூறப்படுகிறது.

நடப்புக்கு சாம்பியனான சென்னை அணியில் இருந்து தொடந்து வீரர்கள் வெளியே செல்வதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சென்னை ரசிகர்கள் இந்த ஆண்டும் நாங்கள் தான் சாம்பியன் என கூறி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.