இலங்கைக்கு வந்த தம்பதிக்கு மின்வெட்டினால் நேர்ந்த கதி….!! ( வைரலாகும் புகைப்படம்)

இலங்கையில் சமீப காலமாக நிலவும் பல மணிநேர மின் வெட்டுக்களால் மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதனை ஒரே ஒரு படம் உணர்த்துகின்றது.

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்ப காலநிலைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் காருக்குள் ஏசியை போட்டு விட்டு புதிதாக பிறந்த குழந்தையுடன் தூங்கும் தம்பதியின் படமொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எங்களுடைய நாட்டில் மக்களுக்கு தேவையான மிக அடிப்படையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்குவதில் அரசாங்கம் தவறி விட்டது. நம் நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் கனவு தான் என சமூகவலைத்தளங்களில் பரவலாகவே கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இந்தப் படத்தின் உண்மை குறித்து சந்தேகம் எழுந்தாலும், எது எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் மின் தடை குறித்து பல்வேறு தரப்பினர்களிடையே இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட குறித்த படத்துக்கு கீழே ஒருவரின் கருத்து பின்வருமாறு,குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களில் கார் இல்லாத குடும்பத்தை பற்றி தான் யோசித்து கவலைப்படுவதாக ஒருவர் கூறுகிறார்.

இன்னொருவர் ,பராக்கிரமபாகு மன்னனின் சகாப்தம் மீண்டும் ஆரம்பித்து விட்டதாக கூறுகிறார்.