முட்டையில் மிளகு சேர்ப்பதன் மகத்துவம்.!

இன்றுள்ள பலருக்கு காலை உணவாகவும்., உணவகங்களுக்கு செல்லும் சமயத்தில் முதலிலேயே யோசனை செய்தாலும் கடைசியாக கூறும் உணவு வகைகளில் ஒன்று ஆம்லேட். முட்டையை உடைத்து அதில் வெங்காயம்., மிளகு., மிளகாய் சேர்த்து வழங்கப்படும் முட்டை வகை உணவு பொருளில் இருக்கும் ஆம்லேட் வகையை சாப்பிடாமல் வந்தால் நமது மனம் ஏனோ ஒரு விதமான வருடலை உணரும்.

மிளகில் இருக்கும் அதிகளவு மருந்துவ குணத்தின் மூலமாக செரிமான மண்டலத்தின் செயல்பாடு மற்றும் சருமத்தை பாதுகாப்பது போன்ற செயல்பாடுகளின் மூலமாக நமது உடலின் நலமானது பாதுகாக்கப்படுகிறது. மேலும்., புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவகுணம் உள்ளது என்பது மகத்துவத்தை அற்புதம் என்று தான் கூற வேண்டும். முட்டையுடன் மிளகை சேர்ந்து உண்ணும் போது வரும் சுவைக்கும்., அதில் இருக்கும் மருத்துவ குணத்தை அறியாமலேயே சாப்பிட்டு இருக்கிறோம்.

வெறுமையான முட்டையின் பச்சை வாடை சேராத சிலர் வெறும் முட்டையை சாப்பிடும் வேளையில் வாந்தி எடுப்பது வழக்கம். ஆகையால் முட்டையுடன் சிறிதளவு மிளகானது சேர்க்கப்படுகிறது. இதனுடன் வெங்காயம்., மிளகாய் மற்றும் காளான்., கீரை வகைகளை சேர்த்து பல விதமான உணவு வகைகளாக தயார் செய்து உண்ணுவது வழக்கம்.

ஒரு ஆம்லெட்டை சாப்பிட்டவுடன் இன்னும் ஒன்று சாப்பிடலாமா? என்ற ஆவலானது நமக்கு இயற்கையாகவே தோன்றிவிடும். மேலும்., முட்டையை வைத்து பல விதமான உணவுகளை தயார் செய்து உண்ணுவது நமக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. மேலும்., எளிமையான முறையில் பல விதத்தில் உண்டாக்க முடியும் என்பதால் இதற்கு இப்படி ஒரு சிறப்பு அமைந்திருக்கிறது.

இந்த உலகத்தின் அனைத்து மூலைகளில் தயார் செய்யப்படும் முட்டை சார்ந்த உணவுகளில் கட்டாயம் மிளகை சேர்க்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இதற்கு பெரிதாக ஏதும் காரணமாக சொல்லப்படாத வேலையில்., முட்டையின் நாற்றத்தை மிளகை சேர்ப்பதன் மூலமாக நீக்கிவிடலாம் என்றும்., இரண்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடும் போது இன்னும் ஒன்று என்று அதிகரித்து கொண்டே செல்லும் என்பதால் சேர்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.