தமிழிசை திருமணத்தில் எம்ஜிஆர்? தமிழிசை வெளியிட்ட தகவல்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை மட்டும் அவரது கணவர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது திருமண வாழ்க்கை குறித்து உரையாடினார்.

முதலில் பேசிய சவுந்தரராஜன், ” எனது உயிரே தமிழிசை தான். இதை தான் புகழாரமாக கூறவில்லை. எனது இதயத்திலிருந்து கூறப்பட்ட வார்த்தைகள்” என மேலும், பல சுவாரசியமான விஷயங்களை கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய தமிழிசை, ” எனது உயிரில் பாதி என் கணவர். எனது வாழ்நாளில் நான் இன்று ஒரு அரசியல்வாதியாக இருக்க காரணம் எனது கணவர் தான்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது தான் எனது திருமணம். கலைஞரும், எம்.ஜி.ஆரும் இணைந்து கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. எனது திருமணம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

எனது திருமணம் கிட்டதட்ட மாநாடு போல தான் இருந்தது. திருமணத்தில் நடந்த ஒரு முக்கிய தருணம் எதுவென்ரால் கலைஞர் எம்.ஜி.ஆரின் அருகில் அமருகையில் வெடித்த கரவொலி தான்.

பின்னர் எம்ஜிஆர்,” பெண் மிகவும் சிறிய பெண்ணாக இருக்கிறார்கள். ஆனால் அவரது பார்வை மிக பெரிய பரந்த பார்வையாக இருக்குமென் நான் நினைக்கிறேன். அவருடைய வளர்ச்சிக்கு சவுந்தரராஜன் ஒருபோதும் தடையாக இருக்க கூடாது” என கூறினார்.

நான் அரசியலுக்கு வருவேன் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு தலைமை பண்பு இருந்தது. திருமணம் நடக்கையில் எம்.ஜி.ஆர். தாலியை வந்து பிடித்து கொண்டு கட்ட சொன்னார்.

காரணம், அவர் முதலில் கலந்துகொண்ட திருமணத்தில் மாப்பிள்ளை பயத்தில் தாலியை தவறவிட்டு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டாராம். அப்படிப்பட்ட நிலை ஏற்ப்பட கூடாதென தான். பின்வரும் அனைத்து திருமணத்திலும் இப்படி செய்கிறேன். என கூறினார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.