பெண்கள் சிலருக்கு தேவையில்லாமல் கால்கள், கைகள் மற்றும் உதட்டின் மேற்பகுதிகளில் பூனை முடிகள் போன்று சில ரோமங்கள் இருக்கக்கூடும். அந்த முடியை நீக்கி பளிச்சென உடலமைப்பை இயற்கையான வழியில் பெற பின்வரும் முறைகளை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை மிளகு – 25 கிராம்,
கடுக்காய்த்தோல் – 100 கிராம்,
மஞ்சள் – 100 கிராம்,
துத்தி – 100 கிராம்,
குப்பைமேனி – 100 கிராம்,
செம்பருத்தி – 100 கிராம்,
வெட்டிவேர் – 100 கிராம்,
நெல்லி வற்றல் – 100 கிராம்,
மகிழம்பூ – 100 கிராம்,
சிச்சலிக் கிழங்கு – 100 கிராம்,
கடலைப்பருப்பு – 100 கிராம்,
சந்தனசீவல் – 100 கிராம்,
உலர்ந்த வெற்றிலை – 100 கிராம்.
தயாரிக்கும் முறை:
முதலில் வெள்ளை மிளகு, கடுக்காய்த்தோல், மஞ்சள், துத்தி, குப்பைமேனி, செம்பருத்தி, வெட்டிவேர், நெல்லி வற்றல், மகிழம்பூ, சிச்சலிக் கிழங்கு, கடலைப்பருப்பு, சந்தனசீவல், உலர்ந்த வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து பொடி செய்துக்கொள்ளவும்.
பின்னர், காலை குளியலின்போது, சூடான பசும்பாலில் தேவையான அளவு தயாரித்த பொடியை கலந்து, உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உள்ள பகுதியில் தேய்த்து அன்றாடம் குளித்து வர தேவையற்ற முடிகள் நீங்கி, உடலும், முகமும் பொளிவு பெறும்.