டோக்கன் கொடுத்த திமுக! கையும் களவுமாக பிடிபட்ட அவலம்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் பிரச்சாரத்தில் வேகம் காட்டி வருகின்றன. திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அவருடைய மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் திமுக போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரத்தினை வேகப்படுத்தி உள்ளார்கள்.

இதில் கடந்த 2011 இல் நடிகர் வடிவேலு பிரச்சாரத்தின் போது அரசியலே தெரியாமல் வாயாலே செய்த காமெடி சேட்டைகளை நினைவுபடுத்தும் வகையில், அவரை தாண்டி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நடிகர் உதயநிதி இன்று கடலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக வருகை தர உள்ளார்.

அவர் பிரசாரத்திற்காக கூட்டம் சேர்க்கும் வகையில் அங்கே உள்ள இளைஞர்களுக்கு அவர்கள் வண்டியில் பெட்ரோல் நிரப்ப 300 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. பெற்றுக்கொண்ட 300 பேரும் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்ப வந்தபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இடம் வசமாக சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் இருந்த 165 டோக்கனைகளையும் கைப்பற்றப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே டோக்கனுக்கு பெயர் பெற்ற கட்சி இருக்கும் நிலையில் தற்போது திமுக அந்த பெயரை தட்டிச் சென்றுள்ளது.