இன்றுள்ள காலகட்டத்தில் பல்வேறு விதமான கலாச்சார மாற்றங்களினால் மேலை நாடுகளின் கலாச்சாரத்தை அதிகளவு விரும்பி வருகிறோம். நாம் விரும்பும் பெரும்பாலான பொருட்களை வாடகைக்காவது எடுத்து நமது ஆசையை நிறைவேற்றி வருகிறோம்.
அந்த வகையில்., காலத்தின் மாற்றத்தால் கலாச்சாரத்தின் விளைவால் பெண்களும் வாடகைக்கு கிடைக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் தொழில் ரீதியாக தங்கியிருக்கும் ஆண்கள் அந்த சமயத்தில் துணையாக தங்களுக்கு பெண் ஒருவரை நியமிக்கின்றனர்.
அவ்வாறு வாடகைக்கு வரும் பெண்கள் சம்பளத்துடன் வந்து அவர்களுடன் தங்கியிருந்து மனைவியை போன்றே அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்த கலாச்சாரமானது தற்போது சென்னையிலும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பணி மற்றும் தொழில் சூழலின் காரணமாக வந்திருக்கும் பல வடமாநிலத்தை சார்ந்த நபர்கள்., இதே போன்ற வாடகை மனைவிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஆந்திரா., மும்பை மட்டும் வங்காள தேசத்தை சார்ந்த பெண்களாக இருக்கின்றனர்.
இவர்களுக்கென தனி அமைப்பு இயங்கியதன் மூலமாக இந்த நிகழ்ச்சிகள் அரங்கேறி வருவதாகவும்., இது போன்ற செயல்களை தனி மனித ஒழுக்கத்தின் மூலமாக மட்டுமே தடுக்க இயலும் என்பது நிதர்சனமான உண்மை….