சிவனொளிபாதமலைக்கும் புத்தர் வந்தார்?

சிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச சபையால், சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றியச் சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், நோர்வூட் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன் பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.