தினம் தினம் மக்கள் எதிர்கொள்ளும் சோகம்..!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் அரசு பொதுமருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது.

இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் இல்லாமல் அருகே இருக்கும் மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்காக பலர் வருகின்றனர்.

இங்கு சுகாதாரமற்ற நிலையில் கழிப்பிடம் உள்ளது. தினமும் கழிப்பறையை சுத்தம் செய்யாததால் மிகவும் அசுத்தமான நிலையிலும், மோசமான துர்நாற்றம் வீசும் காரணத்தினாலும், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கழிப்பறைக்கு உள்ளே செல்லாமல் அதன் அருகிலேயே அசுத்தம் செய்கிறார்கள்.

இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு தொற்று ஏற்படும்அபாயம் உள்ளது.மேலும், கழிப்பறை மேல் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரை கவனிப்பதற்கு ஆட்கள் இல்லாததால், சாலையில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது.

எப்போதும் தொட்டியைச் சுற்றி தண்ணீர் இருப்பதால் காளான்கள் வளர்ந்துள்ளது. இந்த அவலத்தை மருத்துவமனை நிர்வாகம் கண்டும் காணாமலும் இருக்கிறது எனபலர் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே கழிப்பறையை உடனே சுத்தம் செய்ய வேண்டும், சுகாதார பணியாளர்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.