தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது பிரபலமாக உள்ளவர் ராதிகா சரத்குமார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் சினிமாவில் மட்டுமின்றி பல சீரியல்களிலும் வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடிகை ராதிகா தமிழ் மட்டுமின்றி அவ்வப்போது ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் 1993 ஆம் ஆண்டு அர்த்தனா என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு 25 ஆண்டுகளாக மலையாள படம் எதிலும் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் திலீப் நடிப்பில் வெளியான ராம்லீலா என்ற படத்தியில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மலையாள சினிமாவில் இருந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது,. இந்நிலையில் அவர் தற்போது தி கேம்பினோஸ், இட்டிமாணி மேட் இன் சைனா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் தி கேம்பினோஸ் படத்தில் ராதிகா பெண் தாதாவாக நடித்துள்ளார்.
மேலும் மோகன்லால் நடிக்கும் என்ற இட்டிமாணி மேட் இன் சைனா படத்திலும் நான் ராதிகா நடிக்க உள்ளார். மோகன்லாலுடன் ராதிகா கடைசியாக நடித்த படம் 34 வருடங்களுக்கு முன்பு வெளியான கூடும் தேடி. இந்நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளனர்.






