அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்.!! ஆ.ராசாவுக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.!!

17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமைகளில் அமைந்து உள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

நேற்று அதிமுக போட்டியிட உள்ள 20 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கூட்டணி கட்சியான பாமக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும் திமுகவும் 20 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

மக்களவை தேர்தலோடு நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர் பட்டியலை அதிமுக மற்றும் திமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் நேற்று காலை அமமுகவும், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

இதில், நீலகிரி தொகுதியில் அமமுக சார்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராமசாமி போட்டியிட உள்ளார். திமுக சார்பில் 3 வது முறையாக நீலகிரி தொகுதியில் ஆ.ராசா களமிறங்குகிறார்.

அ.ம.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.ராமசாமி அவர்களின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிராமம் ஆகும். ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.ராமசாமி அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் அமமுகவில் இணைந்து, தற்போது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த தொகுதியில் அதிமுக சார்பில், தியாகராஜனும் களமிறங்கியுள்ளதால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.