வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

நாடு முழுவதும் உள்ள வாகனங்களின் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களுக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் நாடு முழுவது ஒரே மாதிரியாக கொன்று வர மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் மூலம் ஓட்டுனர் அல்லது வாகன உரிமையாளர் குறித்த முழுத் தகவல்களும், ஒரே ஸ்மார்ட் அட்டையில் இடம் பெற்றிருக்கும்.

மேலும், இந்த ஸ்மார்ட் அட்டையில் 10 ஆண்டுகள் வரையிலான ஓட்டுநர் அல்லது வாகன உரிமையாளரின் அபராதங்கள், விபத்துகள், ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட முழு தகவலும் இடம்பெறும்.

நாடு முழுவதும் தற்போது காகித வடிவில் உள்ளதை, பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் அட்டையின் பின்புறத்தில் அவசர உதவி எண் உள்ளிட்ட முக்கிய தகவல்களும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.