கிணற்றில் நீராட சென்ற சிறுமி மரணம்!

அலவத்துகொட – கசாவத்த பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

பிரதேசவாசிகளால் சிறுமி காப்பாற்றப்பட்டு அகுரண மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

12 வயதுடைய உயிரிழந்த சிறுமி கிணற்றிற்கு நீராட சென்ற போது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.