முடிவளர்ச்சிக்கு உதவும், சின்னவெங்காய சப்பாத்தி!!

சின்ன வெங்காயம் சற்று காரத்தன்மை மிக்கது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கிருமிகள், குடல்புண்கள் மற்றும் குடல் புழுக்கள் போன்றவற்றை அழித்து ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்கிறது.

மேலும், இது முடி வளர்ச்சிக்கும் உதவ கூடியதாகும். இதனை பயன்படுத்தி சப்பாத்தி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிறிய வெங்காயம் – 2 கப்
கோதுமை மாவு – 1 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 3
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய் – தேவையான அளவு.
எலுமிச்சை சாறு – சிறிதளவு.

செய்முறை:

தோல் நீக்கி சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயையும் நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சை சாறு, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து எடுத்து கல்லில் போட்டு சுட்டு எண்ணெய் விட்டு வெந்ததும் சூடாக பரிமாறவும். இதனுடன் குருமா சேர்த்து கொள்ளவும்.