அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறில் கெய்ல் சர்வதேச போட்டிகளில் 500 சிக்சர்கள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 4வது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 97 பந்துகளில் 162 ஓட்டங்கள் விளாசினார். இதில் 14 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 10 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் பிரையன் லாரா மட்டுமே 10 ஓட்டங்களை கடந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது 2வது வீரராக கிறிஸ் கெய்ல் இணைந்துள்ளார்.
சர்வதேச அளவில் 10 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த 14வது வீரர் கிறிஸ் கெய்ல் ஆவார். மேலும், சர்வதேச போட்டிகளில் 500 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும், ஒருநாள் போட்டிகளில் அப்ரிடிக்கு(351) அடுத்து 300 சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கிறிஸ் கெய்ல் இதுவரை 287 போட்டிகளில் 25 சதம் மற்றும் 50 அரைசதங்களுடன் 10,074 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சம் 215 ஆகும்.