இந்த இருக்கும் நாடுகளில் அந்தந்த நாடுகளின் காலநிலை சூள்நிலைக்கேற்ப மக்கள் உடலமைப்பு மற்றும் உலவியல் அமைப்பை பெற்று இருக்கின்றனர். அந்த வகையில்., அவர்களின் உருவத்திலும்., தோற்றத்திலும்., உடல் அளவிலும் பல்வேறு விதமான மாற்றங்களை பெற்று இருந்து வருகின்றனர். இந்த மாற்றமானது அங்குள்ள புவியியல் மாற்றம் மட்டுமல்லாது., அங்குள்ள நபர்களின் உணவு முறையும் காரணமாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை பொறுத்த வரையில் ஜப்பான் நாட்டை சார்ந்தவர்களின் புத்தி கூர்மையை பற்றி ஆராய்ச்சி செய்ததில் பல விதமான தகவல்கள் வெளிவந்தன. ஜப்பானின் கலாச்சாரத்தை பார்க்கும் போது பிறநாட்டவரை போலவே., அவர்களும் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு அதிகளவு மதிப்பை வழங்குகின்றனர்.
ஜப்பானியர்களின் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையை தவறாது கடைபிடித்து வருகின்றனர். இவர்களின் வைத்தியத்தில் முக்கிய பங்காற்றுவது நீர் தான் என்று தெரிவிக்கின்றனர். தினமும் காலையில் எழுந்தவுடன் 4 கிளாஸ் நீரை பருகிவிடுவார்களாம்.
இதன் மூலமாக கச்சிதமான உடல் அமைப்பு மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும்., காலையில் நீரை எழுந்தவுடன் குடித்துவிட்டு சுமார் 45 நிமிடம் வரை எந்த விதமான ஆகாரத்தையும் எடுத்து கொள்ளாமல் இருக்கின்றனர். இதன் மூலமாக உடலின் எடையும்., அழகும் பராமரிக்கப்படும் என்று கூறுகின்றனர்.
காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்காமல் நீரை குடித்து வரவே சிறந்த உடலை பெற முடியும். இதனால் சிறுநீர் கொலையில் ஏற்படும் அடைப்புகள் போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும் என்றும்., இதய நோய் உள்ளவர்கள் இந்த முறையை மேற்கொண்டால் நல்ல பலன் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து மேற்கொண்டால் உடல் மற்றும் தலை வலிகள் குணமாகும் என்றும்., தினமும் மூன்று வேலை சாப்பாடு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாது என்று தெரிவிக்கின்றனர். இதனை மேற்கொண்டால் முழுமையான பல கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.