பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நுழைந்த இந்திய விமான படை பயங்கரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. 12 விமானங்கள், 20 நிமிட துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வெற்றிகரமாக இந்தியா திரும்பியது.
இந்திய தரப்பிலோ 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகவும் அவர்களின் பதுங்கு குழிகள் உட்பட அனைத்தும் தகர்தெறியப்பட்டதாகவும் இதற்கு 1000 கிலோ வெடி பொருள்களை இந்திய ராணுவம் பயன்படுத்தியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவு ஆலோசகர் ஜான் ஹென்ரிக் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி பாகிஸ்தான் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியது உண்மைதான். இந்த தாக்குதலில் 700 தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பலியானதாகவும் இந்த தாக்குதல் அதிகாலை 2.52 மணிமுதல் 3.26 வரை நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நிறுத்திக்கொள்வது அந்த நாட்டிற்கு நல்லது. ஒருவேளை எதிர்த்தாக்குதல் நடத்த நினைத்தால் அதானால் முழுபாதிப்பு பாகிஸ்தானுக்கு மட்டும்தான். இப்போது 700 ஆக இருப்பது நாளை 1 லட்சமாக உயரும் என்றும் தற்போது இந்தியாவில் இருப்பது தேசிய நலனில் முன்னுரிமை அளிக்கும் அரசு என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.