பேஸ்புக் காதலால் ஓடும் காரில் நேர்ந்த கொடூரம்.!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் நாகேஸ்வரன. இவரது மகன் சபரிராஜன். 25 வயது நிறைந்த இவர் என்ஜினியராக உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பொள்ளாச்சியில் பி எஸ் பி இரண்டாம் படித்து வரும் 19 வயது மாணவியுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களில் சபரிராஜன் அந்த பெண்ணை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணும் அவரது காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி உணவு இடைவேளையின்போது அந்தப் பெண்ணை தொடர்புகொண்ட சபரிராஜன் உடனடியாக அவரை ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்துள்ளார்.உடனே அந்தப் பெண்ணும் அங்கு விரைந்துள்ளார்.

அங்கு தனது 3 நண்பர்களுடன் காத்திருந்த சபரிராஜன் மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றி புறப்பட்டனர்.இந்நிலையில் கார் சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவியின் உடையை விலக்கி அவளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதனை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார் மேலும் ஆண்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வீடியோ எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் இல்லை என்று அந்த பெண் கூறியதை தொடர்ந்து கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை வாங்கிக் கொண்டு அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த அந்த பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்கள் அவர்கள் 4 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.இந்நிலையில் அவர்களில் 3 பேர் ஜோதி நகரில் இருப்பதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து அவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் தலைமறைவாகியுள்ள சபரி ராஜனின் நண்பன் திருநாவுக்கரசரை தீவிரமாக தேதி வருகின்றனர்.