மேகன் ஒரு பெண் சிங்கம்! ஆவிகளுடன் பேசும் நபர் அதிரடி

ஆவிகளுடன் பேசும் ஒரு நபர் 2016ஆம் ஆண்டு தன் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்வதற்காக தன்னை மேகன் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நம்பிய கனேடிய செஃப்பான Cory Vitiello என்பவருடன் காதலிலிருந்த மேகன், Richard Win (73) என்னும் அந்த ஆவிகளுடன் பேசும் நபரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

அப்போது ஒரு அமெரிக்க நடிகையாக இருந்த மேகன், தன்னை சந்தித்தபோது, ஒரு நடிகையாவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர் கடவுள் நம்பிக்கையுடைய, நற்குணங்கள் கொண்ட ஒரு குடும்பப்பெண் என்றும் வர்ணிக்கிறார் Richard.

குழந்தைகள் என்றால் மேகனுக்கு அவ்வளவு பிடிக்கும் என்றும், பெண் குழந்தை பெற்றுக் கொள்ள மேகனுக்கு ஆசை என்றும், தானே ஃபாஷன் ஆடைகளை விரும்புபவர் என்பதால், தன் குழந்தைக்கும் வித விதமாக உடுத்திப் பார்க்க மேகனுக்கு ஆசை என்றும் தெரிவித்துள்ளார் Richard.

மேகன் சிம்ம ராசி கொண்டவர், எனவே ஒரு பெண் சிங்கம் எப்படி தன் குட்டிகளை கவனமாக பாதுகாக்குமோ அவ்வாறே மேகனும் தன் குழந்தைகளை பாதுகாப்பார் என்றும், தன் பிள்ளைகளை வெளியுலகுக்கு காட்ட விரும்ப மாட்டார் என்றும் தெரிவிக்கிறார் அவர்.

மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்பதால், மேகன் குழந்தைகளை தத்தெடுப்பதற்கும் வாய்ப்புள்ளது என்கிறார் Richard.