காஷ்மீரில், புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலால், நம் இந்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உலகமே கன்டனம் தெரிவித்தது. இந்த தீவிரவாதத்திற்கு துணை போவது, பாகிஸ்தான் என்பதும், வெடித்த வெடி குண்டு பாகங்களைக் கொண்டு, அது பாகிஸ்தானின் ராணுவத்தில் உள்ள வெடி குண்டுகளின் ஒரு பாகம் என்பதைக் கண்டறிந்தது.
இதனால், வர்த்தக நாடு மற்றும் நட்புறவு நாடு பட்டியலில் இருந்து, பாகிஸ்தானை நீக்கியது இந்தியா. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் 200 பொருட்களுக்கு, இந்தியா தடை விதித்துள்ளது.
இதனால், பாகிஸ்தானின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்கும் தண்ணீருக்கும், இந்தியா தற்போது தடை விதித்துள்ளது.
கிழக்கு பிராந்தியத்தில் பாயும் ரவி, பீஸ், சட்லெஜ் ஆகிய நதிகளில், இந்தியா தனது பங்கை, பாகிஸ்தானுடன் பகிர்ந்து வருகிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நதிகளின் தண்ணீரையும் திருப்பி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனை, மத்திய நீர் ஆதாரம் மற்றும் நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த அதிரடி முடிவைக் கேள்விப்பட்டு, கதி கலங்கிப் போய் உள்ளது பாகிஸ்தான்.