மலையகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் ரஷ்யன் காதலிகளுடன் உல்லாசம் அனுபவித்து வருவதாக ராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நலன்குறித்து அடிக்கடி சத்தம் போடும் கட்சி ஒன்றின் தலைவரே ஆபத்தான கொக்கெய்ன் போதைப்பொருளை பயன்படுத்தி வருகிறார்.
காலை வேளையில் ரஷ்யன் காதலிகளுடன் கொக்கொயன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்,
“தோட்டத் தொழிலாளர் குறித்து அடிக்கடி சத்தமிடும் -அவர்களுக்காக முன்னிலையாவதாக காட்டிக்கொள்ளும் -பாராளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தில் இருக்கும்- சிவந்த கண்களுடன் – தூக்கத்தில் இருக்கும் கட்சித் தலைவர் ஒருவருக்கு ரஷ்யன் காதலிகளுடன் காலைதோறும் கொக்கெய்ன் போதைப்பொருள் பாவிக்கும் பழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. யாரென்று தேடிக்கொள்ளுங்கள்…” என குறிப்பிட்டார்.
இலங்கையில் கொக்கொய்ன் போதைப்பொருள் ஆபத்தானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.