சென்னையில் உள்ள கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் கடைக்கு முன்பாக பெண்ணொருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்., கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தார். இதனை கண்டு அதிச்சியடைந்த தொழிலாளர்கள் விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோயம்பேடு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் சக காவல் துறையினர் விரைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்று கொலையான பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும்., கொலையான பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம் என்று சந்தேகித்தனர். பெண் எந்த பகுதியை சார்ந்தவர்? மற்றும் அவர் குறித்த தகவல் அறியாததால்., இது குறித்த தகவலை சேகரிக்க துவங்கினர்.
அவரது கழுத்து மட்டும் கத்தியால் அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்த காவல் துறையினர்., விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அந்த சமயத்தில்., அங்குள்ள பணியாளர்கள் இறந்த பெண் இரவு சுமார் 10 மணியளவில் ஆண் நபருடன் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ய காவல் துறையினர் துவங்கினர்.
மேலும்., கொலையான பெண் காதல் பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள துவங்கிய நிலையில்., பிரியாணியில் கறிக்கோழியின் இறைச்சி இல்லாததால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலானது வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






