தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால்., அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சின்னத்திரை நடிகையான யாஷிகா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தியை பெங்காலியில் இருக்கும் பத்திரிக்கையில்., அவருடைய செய்தியை எழுதிவிட்டு., புகைப்படத்தில் இவருடைய புகைப்படத்தை உபயோகம் செய்துள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் ஒரு கணம் அதிர்ச்சியடையவே., அந்த பதிவை யாஷிகாவின் ட்விட்டர் பதிவிற்கு டேக் செய்துள்ளனர்.
What the hell :O https://t.co/xgG7ch6cIt
— Yashika Aannand (@iamyashikaanand) February 17, 2019
இதனை கண்ட what the hell என்று கோபத்துடன் பதிலளித்துள்ளார். இதனையடுத்து இதனை கண்ட ரசிகர்கள் பெருமூச்சு விட்டு நிம்மதியடைந்தனர்.






