அந்த காலத்தில் மேலை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த வியாபாரிகள்., நமது நாட்டில் இருந்த பல பொருட்களை அங்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கொண்டு வந்த பல விளை பொருட்களை அறிமுகப்படுத்தி விளைபொருளாக்கினர். அந்த வகையில்., கிடைத்ததே பப்பாளி பழம். இந்த பப்பாளி பழத்தின் நன்மைகள் பலருக்கு தெரிந்தும்., தெரியாமலும் இருக்கிறது. அதனை பற்றி காண்போம்.
ஆண்மை குறைபாடு:
இன்று உள்ள காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக பல ஆண்கள் அவர்களின் உயிரணுக்களை குறைத்து கொண்டாட்டத்தின் காரணமாக மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கின்றனர். பப்பாளி பழமானது உயிரணுக்களை அதிகரிக்கும் திறனை கொண்டது என்ற காரணத்தால் பப்பாளியை சாப்பிடுவது நல்லது.
மாதவிடாய்:
பெண்களுக்கு மாதம் தோறும் ஏற்படும் உதிரப்போக்கு என்பது இயற்கையான ஒன்றாகும். இந்த சமயத்தில் சில பெண்களுக்கு அதிகளவில் இரத்த போக்கானது ஏற்படும். இதன் காரணமாக உடலில் இருக்கும் சத்துக்கள் குறைத்து., உடலின் பலமானது குறைகிறது. இந்த சமயத்தில் இழந்த உடலின் சத்துக்களை மீட்க மாதவிடாய் கழிந்த பின்னர் பப்பாளி பழத்தை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை வியாதி:
இன்றுள்ள இளைஞர்கள் மட்டுமல்லாது பெரும்பாலனோர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வியாதியை குணமாக்கும் வல்லமை படைத்த பழங்களுள் ஒன்று பப்பாளி. இதன் மூலமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது சீராக்கப்படுவதோடு., சர்க்கரை நோயாளிகளின் உடல் பலம் குறைவதையும் தடுக்க இயலும்.
கல்லீரல்:
நமது உடலில் இருக்கும் கல்லீரல் அதிகளவு நச்சுக்கள் தங்குவதாலும்., அதீத சுழற்சி முறையின் காரணமாக கல்லீரலில் வீக்கமானது ஏற்படுகிறது. இதனை தீர்ப்பதற்கு பப்பாளி பழமானது அதிகளவில் உபயோகப்படுகிறது. காலை மற்றும் மதிய நேரத்தில்., பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரவே., கல்லீரல் இருக்கும் கிருமிகளானது நீங்கி கல்லீரல் குணமாகி நமது உடல் நலமும் பாதுகாக்கப்படும்.






