சீரகத்திற்கு இப்படி ஒரு குணமா?.! மன நோய் மற்றும் இரத்த அழுத்தத்திற்கு!

சீரகத்தை நாம் நமது அன்றாட வாழ்வில் தயாரிக்கும் உணவுகளில் அம்மா (வீடுகளில்) / நண்பர்கள் (பேச்சுலர் ரூமில்) சேர்ப்பதை கண்டிருக்கிறோம். சிலர் அதனை அரைத்தும்., சிலர் எண்ணையில் கடுகு உளுந்து தாளித்த பின்னர் சேர்ப்பது வழக்கம். அது அவர்களின் கைவண்ணத்தில் தயாரிக்கப்படும் சமையலை பொறுத்தது. சிலர் வெறுமையாகவே சீரகத்தை உண்ணும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்த வகையில்., சீரகத்தின் நன்மைகள் குறித்து காண்போம்.

வெறும் சீரகத்தை வாயில் போட்டு நன்றாக மென்று., சாதாரண நீரை பருகினால் தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படுவது போல் உள்ள பிரச்சனையானது நீங்கிவிடும்.

திராட்சை பழத்தின் சாறுடன் சீரகத்தை கலந்து குடித்து வந்தால்., இரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும்.

இல்லங்களில் அகத்திகீரை வகை உணவுகளை சமைக்கும் சமயத்தில் சின்ன வெங்காயத்துடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மன நோயானது குணமாகும். மேலும்., இதனை கசாயம் முறையிலும் சாப்பிடலாம்.

சிலருக்கு அதிகளவில் எப்பொழுதும் இருக்கும் நெஞ்சு எரிச்சலுக்கு சீரகத்துடன் வெல்லம் சேர்த்து சிறிதளவு சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சலானது கட்டுக்குள் இருக்கும்., தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் சரியாகிவிடும்.

சீரகத்துடன் எலுமிச்சை சாறை சேர்ந்து உலர்த்தி தூளாக மாற்றி., தினமும் ஒரு சிறிய கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் மார்பு வலியானது நீங்கும்., இந்த பொடியை சாப்பிட பின்னர் மோர் குடிக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் மோருடன் சீரகம்., இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து பெருகிவரும் பட்சத்தில் வாயு தொல்லையானது நீங்கும். சீரகத்தை எலுமிச்சம்பழம் மற்றும் இஞ்சி சாறில் ஊறவைத்து கொண்டு தினமும் இரண்டு வேலை மூன்று நாட்கள் தொடர்ந்து உண்டு வந்தால் பித்தம் குணமாகும்.