கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் தெருவை சார்ந்தவர் பாபுராஜ் (37). இவர் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவியின் பெயர் பாக்கியம் (வயது 34). இவர்கள் இருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
அங்குள்ள பி.கே புத்தூர் பகுதியை சார்ந்த பெண்ணிற்கும்., பாபுராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
கள்ளகாதலியின் மீதுள்ள அதீத மோகத்தில் குழந்தைகளை பிரிந்து கள்ளகாதலியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். குழந்தைகளை கணவர் பிரிந்து கள்ளக்காதலி இல்லத்தில் வசித்து வந்த காரணத்தால்., பாக்கியம் குழந்தைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையியல்., நேற்று மது போதையில் மனைவியின் இல்லத்திற்கு பாபுராஜ் வந்திருந்தார். இதனை கண்டித்த அவர் மீண்டும் கள்ளக்காதலி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாபுராஜ் மது பாட்டிலை உடைத்து பாக்கியத்தை குத்த முயற்சித்தார்., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த கட்டையை கொண்டு கணவரின் தலையில் அடிக்கவே., சம்பவ இடத்திலேயே நிலை குலைந்து விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கொசு மருந்து மற்றும் பினாயிலை குடித்துவிட்டு மயக்கமடைந்தார். தனது தாய் மற்றும் தந்தை சண்டையிட்டு நீண்ட நேரம் ஆகியும் எந்த விதமான சத்தமும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பாக்கியத்தின் மூத்த மகள் பார்க்கவே., இருவரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.
இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து., இவர்கள் இருவரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில்., பாபுராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மேலும்., பாக்கியம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த விசயத்தை அறிந்த காவல் துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






