ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிரான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவும் கையொப்பமிட்டிருந்ததாகவும் இதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு விளங்க முடியுமாக இருக்கும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் மாவட்ட செயலாளர் யார் என்பதைத் தீர்மானிப்பது அரச சார்பற்ற நிறுவனங்கள். இந்த நாட்டின் பிரதமர் ஞானசார தேரரின் விடுதலைக்கு எதிராக செயற்படுவது ஏன்? எனவும் தேரர் கேள்வி எழுப்பினார்.
பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.






