முடக்கத்தான் கீரை தோசை:
2 கப் புழுங்கல் அரிசி
2 கைப்பிடி முடக்கத்தான் கீரை
தேவையான அளவு உப்பு
செய்முறை:
2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து தோசை வார்த்து சாப்பிடலாம்.
அல்லது இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதாரணத் தோசை மாவுடன் கலந்தும் தோசை வார்க்கலாம்.
இதனை காரமான தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
இந்த முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
மேலும்,
*மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்களை கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
*முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.