பெண்களின் வாழ்க்கையை சூரையாடிய கொடூரன்! நிர்கதியாய் நிற்கும் பெண்கள்

மலையகம், கொழும்பு, வடகிழக்கு என பல பகுதிகளில் பல தமிழ்பெண்கள் இந்த நபரால் ஏமாற்றப்பட்டு அவர்கள் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிர்கதியாய் நிற்கின்றனர்.

இவரால் பாடசாலை மாணவிகளை சீரழித்து அவர்களை வீடியோ எடுத்து அப்பெண்களை பணயம் வைத்து மத்திய மலைநாட்டில் இயற்கை காட்சி கொண்ட மாத்தளை,கண்டி,நுவரேலியா போன்ற இடங்களிலும் ,தென்பகுதி இடங்களில் அமைந்துள்ள முக்கிய பெரும்பான்மையினத்தவர் கடற்கரை உல்லாச விடுதிகள் உள்ள அம்பாந்தோட்டை ,காலி,மாத்தறை பகுதியில் விபச்சாரத்திற்கும் களியாட்டத்திற்கும் பயன்படுத்துவது வழமையாகும்.

இவர் பெரும்பாலும் தமது வசிப்பிடமாக மாத்தளை நகரை,கொழும்பை வைத்துள்ளார்.

மலையகத்தில் வேலைவாய்ப்பின்மையால் கொழும்பு நகரை நோக்கி தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் ஏழ்மை தமிழ் பெண்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாகவும் தங்குவதற்கு பாதுகாப்பான வீடுகள் அமைத்து கொடுப்பதாக கூறி அவர்களை கூட்டிச்சென்று அவரின் மோசமான ஆசையை தீர்த்து கொள்கிறார்.

மேலும் அவர்களை பாலியல் விடுதியில் விற்று விடுகிறார்.இவனால் மாத்தளையின்வெவ்வேறு உள்ளூர் கிராமங்களிலிருந்து 5பெண்கள் ஏமாற்றப்பட்டு கரு கலைத்து தற்போது தங்கள் வாழ்க்கை நிர்க்கதியாகிய நிலையில் தவிக்கின்றார்.

இவருக்கு இப்படி சம்பாதிக்கும் பணத்தாலும் பெரும்பான்மையினத்தவரின் போதைப்பொருள் பாதளகுழுவுடன் தொடர்புயிருப்பதால் பல போலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்தும் இவன்மீது இதுவரை சட்டநடவடிக்கை இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது