மதமாற்றத்திற்கு எதிரான முதல் வழக்கு பதிவு!!

இந்துக்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா ஆகும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால், ஆண்டுதோறும் இந்து மக்களின் எண்ணிக்கை குறைந்தும், கிரித்தவர்கள் மற்றும் இசுலாமியர்களின் மக்கள்தொகை அதிகரித்தும் வருகிறது.

இந்து அல்லாத மதத்தவர்கள் பிற மதத்தை சேர்ந்தவர்களை மதமாற்றம் செய்து கொண்டிருப்பது தான் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. சிலரை விலைபேசியும், சிலர் மூளை சலவை செய்யப்படும் மதம் மாற்றப்படுகிறார்களாம்.

இதே போல், கோவை அருகே, சாமிசெட்டிபாளையத்தில் வசித்து வரும், செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா என்பவர், ‘ தான் தனியாக இருந்த போது, அங்கு திவ்யா என்ற பெண் வந்து தனது கையில் பைபிள் ஒன்றை கொடுத்து, எகோவா சாட்சி எனவும்,

நீங்கள் வணங்கும் இந்து மத கடவுள்கள் கடவுள் அல்ல.சாத்தான்கள் எனவும், எங்களது கடவுள் தான் உண்மையானவர் என்றும், எங்களது கடவுளை தான் இனி நீங்கள் வணங்க வேண்டும் எனவும், வற்புத்தினார். இதனால் தான் மனா உளைச்சலுக்கு ஆளாக்கினேன் என்றும்,

தொடர்ந்து இந்து கடவுள்களை இழிவாக பேசியுள்ளார்’ என்றும் பவித்ரா பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை காவல் துறையினர் பதிவு செய்து ஏற்று கொண்டனர். உலகிலேயே மதமாற்றத்திற்கு எதிரான முதல் CSR வழக்கு பதிவு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.