மின்கம்பத்தை தொட்டதும் 5 நிமிடம் அசைவற்று நின்ற சிறுவன்: வீடியோ காட்சி

ஐதராபாத்தில் விளையாடிக்கொண்டே மின்கம்பத்தை தொட்ட சிறுவன், அடுத்த 5 நிமிடங்களில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலம் நர்சிங்கி பகுதியில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன், எதார்த்தமாக ஓடி சென்று அங்கிருந்த மின்கம்பத்தை பிடித்து சுற்ற பார்த்தான்.

ஆனால் அதனை பிடித்த 4 முதல் 5 நிமிடங்கள் வரை அசையாமல் அப்படியே நின்றிருக்கிறான்.

இதற்கிடையில் பலரும் அந்த வழியை கடந்த சென்றாலும், ஒரு ஆள் கூட சிறுவனை சரியாக கவனிக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து சிறுவன் அப்படியே தரையில் சரிந்துள்ளான். இதனை பார்த்த அனைவரும் வேகமாக ஓடி சென்று சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சிறுவனின் தந்தை சென்னையில் வேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் தற்போது ஐதராபாத்திற்கு விரைந்துள்ளார். சிறுவன் தரையில் சரிந்ததும், அவனை அங்கிருந்த காவலாளி தூக்கியுள்ளார்.

அப்போது அவருக்கு லேசாக மின்சாரம் பாய்ந்துள்ளது. தரையில் கிடந்த அருந்த மின்கம்பியை கவனிக்காமல் சிறுவன் மிதித்ததாலே இந்த விபத்து நேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.