பிரபல வீரர் திடீர் மறைவால் கண்ணீர் கடலில் தத்தளிக்கும் ரசிகர்கள்..!

ஸ்ட்ரைக்கர் பிரிவில் சூழலும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எமிலியானோ சலா பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கிளப் அணியான நான்டஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

நான்டஸ் அணியுடனான ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி எமிலியானோ சலாவை வாங்கியது.

கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அன்று கார்டிப் நகரில் புதிய அணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஜனவரி 21-ஆம் தேதி ஒற்றை என்ஜின் உடையத் தனியார் விமானத்தில் பிரான்ஸ் நாட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தார்.

சேனல் தீவுகளுக்கு அருகே எமிலியா னோ பயணித்த விமானம் திடீரென மாய மானது. எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்ததையெடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

விமானம் கடலில் விழுந்ததற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. உடல் கிடைக்கவில்லை என்ப தால் எமிலியானோ உயிரோடு திரும்பி வருவார் என அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த னர். இந்நிலையில்,விமானம் விபத்துக்குள்ளான இடத்தை மீட்புக் குழு கண்டறிந்தது.

விமான இடிபாடுகளில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்ததால் டிஎன்ஏ சோதனைக்குப் பின்னரே யார் என்று அறிவிக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்தது.

நடைபெற்ற டிஎன்ஏ சோதனையில் அது எலிமியானோ சடலம்என அறிவிக்கப்பட்டது.எலிமியானோ பலி யான சம்பவத்தால் அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் ததும்ப சேனல்தீவுகளுக்கு படையெடுக்கத் தொடங்கி யுள்ளனர்.

29 வயதாகும் எமிலியானோ சலா ஸ்ட்ரைக்கர் பிரிவில் பம்பரமாகச் சுழலுவார். தனது அசத்தலான ஆட்டத்தால் அர்ஜெண்டினா தேசிய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது திடீர் மறைவால்ரசிகர்கள் கண்ணீர் கடலில் தத்தளிக்கின்றனர்.