சுவையான அவல் லட்டு செய்வது எப்படி?

விழாக்கள் என்றாலே எப்பொழுதும், லட்டு, ஜாங்கிரி என்று வழக்கமான உணவையே செய்யாமல், அவள் லட்டை முயற்சி செய்யவும். இது உறவினர்களுக்கு புருவத்தை உயர்த்தும் விதமான ஸ்பெஷல் லட்டு. எவ்வாறு செய்யலாமென பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்
சீனி – 1 கப்
தேங்காய் துருவல் வறுத்தது – ஒரு கப்
முந்திரி -1/2 கப்
வறுத்த நிலக்கடலை -1/2 கப்

செய்முறை:

அவலை சுத்தம் செய்து வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் சீனியை கொட்டி பதமாக பாகு காய்ச்சவும்.

இந்த பாகில் அவலைச் சேர்த்து நன்றாக கிளறவும்.

இத்துடன் முந்திரி, வறுத்த நிலக்கடலை, தேங்காய் துருவல் ஆகியவைகளை சேர்த்து கிளற வேண்டும்.

அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மிதமான சூட்டில் லட்டு பிடிக்க வேண்டும்.

ஆறினால் இறுகிவிடும் எனவே சூடு ஆறும் முன் லட்டு பிடிக்கவேண்டும்.