புதிய கட்சியை தொடங்கும் நடிகர் சூர்யா?

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் ஒரு அரசியல் படம்.

என்.ஜி.கே. படத்தில் சூர்யா, எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர், 2004-லில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்று நடத்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருக்கிய உள்ளது. இதில் என்.ஜி.கே. படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது லீக்காகி உள்ளது.அதில் அரசியல் மாநாடு போற காட்சிகள் இடம் பெறுகிறது. அதற்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதில் காக்கும் முன்னேற்ற கழகம் என்ற பெயர் உள்ளது.