உணவு பொருட்கள் இப்படி வைப்பது கெடுதல் …?

வீடுகளில் சில உணவுங்களை ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது என்பது எத்தனைபேருக்கு தெரியும். இது நம் முன்னோர்கள் நமக்குள் சில நம்பிக்கைகளாக விதைத்து சென்றுள்ளனர். ஆனால் இதில் ஒரு அறிவியல் காரணங்கள் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை எப்போதும், தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில் வாழைப்பழத்தில் எத்திலீன் என்கிற வாயுவை வெளியேறுகிறது. எனவே அதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் விரைவில் கெட்டுபோகும் நிலைக்கு தள்ளப்படும். எனவே வாழைப்பழத்தை தனியாக தான் வைக்க வேண்டும்.

திராட்சை

திராட்சை பழத்தை பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைப்பது வேதி தன்மை பெற்று விட கூடும். குறிப்பாக திராட்சையை ஒரு போதும் பிளாஸ்டிக் பைகளில் வைப்பது தவிக்க வேண்டிய ஒன்று. மாறாக துணி பைகளில் வைப்பது சிறந்தது.

ஆரஞ், ஆப்பிள்

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால், இதனை சேர்த்து வைப்பது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி விடும். இதை சமையல் அறையில் வைத்தாலும், அல்லது ஃபிரிட்ஜில் வைத்தாலும் ஒருசேர வைத்தால் இரண்டுமே மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மூலிகைகள்

சில வீடுகளில் மூலிகைகளை அப்படியே வைத்து ஃபிரிட்ஜிலோ அல்லது வெளியிலோ வைத்து விடுவார்கள். இது போன்ற பழக்கம் மூலிகையின் தன்மையை இழக்க செய்து விடும். இதற்கு மாறாக அதன் தேவையற்ற பகுதிகளை நீக்கி நீர் ஊற்றிய ஜாடியில் வைத்து பராமரித்தால் 2 வாரம் வரை அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் எத்திலீன் வாயுவை அதிகம் உற்பத்தி செய்ய கூடிய ஒன்றுதான். எனவே, வீட்டில் வெள்ளரிக்காயுடன் வேறு எந்தவித உணவுகளையும் சேர்த்து வைப்பதை தவிர்க்கவும். மீறி வைத்தால் இவற்றின் தன்மை மாறி விடும்.

தக்காளி

தக்காளியை எப்போது ஃபிரிட்ஜில் வைக்ககூடாது. இதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் இதன் சுவையும் மணமும் முழுவதுமாக மாறி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஃபிரிட்ஜில் வைக்காத தக்காளிகளே அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டவையாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டைகளில் பாக்டீரியா உற்பத்தி அதிகம் இருப்பதால் ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. இதை வெளிபகுதியில் வைத்தால் தட்பவெப்பநிலைய எளிதில் ஃபாக்டீரியாக்களை உற்பத்தி செய்து கேடு விளைவிக்கும்.