இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் லக்னோ நகரில் இருக்கும் அம்பேத்கார் நகரை சார்ந்தவர் சமந்தா. இவர் அங்குள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
அதே சுகாதார மையத்தில் பணியற்றி வரும் ராஜேஷ் என்ற மருத்துவருடன் சமந்தாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்கள் இருவருக்கும் இடையே காதலாக மலரவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்., இவர்கள் இருவரும் அங்குள்ள விடுதியில் அறையெடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளக்கூறி ராஜேஷிடம் காதலி சமந்தா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறானது முற்றவே., ஆத்திரமடைந்த ராஜேஷ் சமந்தாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்த அவர் பயந்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இரண்டு நாட்களாக கதவுகள் திறக்கப்படாததை கண்டு விடுதியின் உரிமையாளர் அதிர்ச்சிடைந்துள்ளார்.
மேலும்., அறையின் கதவை தட்டி பார்த்த சமயத்தில் அறையில் இருந்து எந்த விதமான சத்தமும் இல்லாததால்., சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அந்த நேரத்தில் சமந்தா கொலை செய்யப்பட்டு அவருக்கு அருகில் கடிதம் ஒன்று இருப்பதை பார்த்தனர். அந்த கடிதத்தில் நானும் எனது மருத்துவமனையில் பணியாற்றிய சமந்தா என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில்., எதற்கெடுத்தாலும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் அவளை கொலை செய்துவிட்டேன்.
இதனால் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தார். இதனையடுத்து சமந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜேஷ் தற்கொலை ஏதேனும் செய்து கொண்டாரா? அல்லது தலைமறைவாக உள்ளாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.