ஒட்டுமொத்த விமர்சகர்கள் முகத்திலும் கரியை பூசினார் தோனி!

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 க்கு 1 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் இன்று கடைசி மற்றும் இறுதிப் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்களை செய்துள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத எம் எஸ் தோனி இந்த போட்டியில் ஆடுகிறார். அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜயசங்கர் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பந்துவீச்சாளர் கலீல் அஹமட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் முகமது சமி இணைக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை காயமடைந்த தொடக்க வீரர் குப்தில் நீக்கப்பட்டு மீண்டும் காலின் முன்றோ அழைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அதன்படி ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிர்ச்சி தொடக்கம் கொடுத்தார். 16 பந்தில் 2 ரன்களை அடித்த அவர் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 13 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே அடித்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதேபோல் அடுத்து களமிறங்கிய புதுமுக வீரர் சுப்மன் கில் கடந்த போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் ஏமாற்றம் அளித்து 7 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில் இந்திய அணி தடுமாறியபோது காப்பாற்றுவதற்கு தோனி இல்லை என அனைவரும் கூறிய நிலையில், 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தோனி களமிறங்கினார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் முதல் பந்திலேயே கண்டம் தப்பினார். அவருக்கு எதிராக LBW அவுட் கேட்டு முறையிட நடுவர் அவுட் கொடுக்க மறுக்க நியூசிலாந்து ரிவியூ செய்ய பந்து ஸ்டம்பில் விட்டு விலகி செல்வது தெரியவந்ததையடுத்து முதல் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை பவுல்ட்டின் அசத்தலான இன்ஸ்விங்கரில் கிளீன் போல்டாகி 1 ரன்களில் வெளியேறினார்.

கடந்த போட்டியில் தோணி இருந்திருந்தால் ஆட்டமே தலைகீழாக மாறியிருக்கும் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய அணியை கிண்டலடித்தவர்களுக்கு தோனி முகத்தில் கரியை பூசி உள்ளார். கிரிக்கெட்டில் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மிகசிறந்த பந்துவீச்சாளரின் மிகசிறந்த பந்துகளில் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் தடுமாறத்தான் செய்வார்கள் என்பதனை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தோனி சொல்லாமல் அவுட்டாகி சென்று உள்ளார். இந்த போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கம் கொடுத்திருப்பது இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தோனி அவுட்டான போது 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற பரிதாப நிலையில் உள்ளது.