கனடாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புற்றுநோயாளியுடன் பெண் மருத்துவர் நெருக்கமாக இருந்ததால், அவருடைய உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த 37 வயதான மருத்துவர் தீபா சுந்தரலிங்கம், டொரண்டோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறப்பு புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
இவர் சிகிச்சைக்கு வந்த மெலிந்த புற்றுநோயாளியிடம் அத்துமீறி நடந்துள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் மற்றும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் ஒருமுறை என அந்த நோயாளிக்கு 23 முறை சிகிச்சை அளித்துள்ளார்.
மருத்துவமனைக்கு மது அருந்திவிட்டு வந்த தீபா, இரவு முழுவதும் ஒரே படுக்கையில் நோயாளியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
மேலும், அவருடைய செல்போன், இன்ஸ்டாகிராம் மூலம் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அவருடைய வீட்டிற்கு சென்றும் நெருக்கம் காட்டியுள்ளார்.
நமக்குள் இருக்கும் ரகசியம் வெளியில் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என அந்த நோயாளியிடம் கூறியுள்ளார்.
இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த நபர் புகார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஒழுங்கு ஆணையம், தீபா நோயாளிகளிடம் அத்துமீறியிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனால் தீபாவின் உரிமத்தை ரத்து செய்த ஒழுங்கு ஆணையம் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில், உங்கள் நோயாளியின் உடல்நலத்திற்கும், கவனிப்பிற்கும், ஆதரவிற்கும் நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக உங்கள் சொந்த திருப்திக்கு நீங்கள் பயனடைந்தீர்கள்.
நீங்கள் உங்களை மற்றும் தொழிலை ஏமாற்றிவிட்டீர்கள் என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், நோயாளியின் சிகிச்சை செலவுகளுக்காக சுந்தரலிங்கம் இப்போது $ 16,000 செலுத்த வேண்டும்,. அதோடு கூடுதல் $ 6,000 சிவில் விசாரணை செலவினங்களுக்காக செலவழிக்க வேண்டும். அதனை விசாரணை ஆரம்பமான 23ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.