பல்கலைக்கழக மாணவி தூக்கிலிட்டுத் தற்கொலை….!!யாழில் பெரும் சோகம்…!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

22 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு இன்று அதிகாலை 5.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரிப் பொலிஸார்,

குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.