இன்ஸ்டாகிராம் என் மகளை கொன்று விட்டது…: தந்தையின் கண்ணீர்

பிரித்தானியாவில் பள்ளி மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்கொலை குறித்த செய்திகளை அதிகம் பார்த்தும் பகிர்ந்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் அயன்ரசல் இவரது மகள் மோலிரசல் பள்ளியில் படித்து வந்துள்ளாள். இந்நிலையில் அவளது மொபையில் போன்னில் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறாள்.

பொதுவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பக்கங்கள் உள்ளன. அதில் மோலி பெரும்பாலும் தற்கொலை குறித்தும், மரணம் குறித்ததுமாக பதிவிடும் பக்கங்களை தொடர்ந்து வந்துள்ளாள். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை வருத்தி கொண்டு புகைப்படங்கள் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடும் மன உழைச்சலுக்கு ஆளான மோலி திடீரென்று தற்கொலை செய்து கொண்டாள். இது குறித்து அவளது தந்தை அயன்ரசல் தெரிவிக்கையில் ”இன்ஸ்டாகிராம் என்னுடைய மகளை கொலை செய்துவிட்டது. அவள் உயிருடன் இருந்திருந்தால் நிறைய சாதித்திருப்பாள் என்றும், சமூக வலைதளங்களும், இணையமும்தான் என் மகளின் இறப்பிற்கு காரணம் என்றும் கூறினார்.

பொதுவாக கடந்த காலங்களில் பள்ளி குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட 200 பள்ளிமாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தெரிகிறது.

குறிப்பாக சமூக வலைதள பக்கத்தில் இதுபோன்ற பதிவுகள் வெளியிடுவதை மாணவர்கள் பொரும்பாலும் வழக்கமாக கொண்டுள்ளனர்.