வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் அவர் கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.பின்னர் அவர் குறுகிய காலத்தில் ரஜினிமுருகன், தொடரி,ரெமோ ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் ‘நடிகையர் திலகம்’ என்ற சாவித்திரியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார்.
கீர்த்தி சுரேஷ் முன்னாள் நடிகை மேனகா சுரேசின் மகள். மேலும் கீர்த்தியின் பாட்டி சரோஜாவும் ஒரு நடிகை .ஆனால் அவர் சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு ஒதுங்கியவர்.
இந்நிலையில் அவர் தனது 80 வயதில் மீண்டும் ரெமோ, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தாதா 87 என்ற படத்தில் நாயகியாகவும் நடிக்கிறார். இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பாட்டிக்கு வாய்ப்பு கேட்பதாக ஒரு வதந்தி பரவி வந்தது.
இது குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், யார் இப்படி எல்லாம் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அப்படி எந்த இயக்குனரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு நடிக்கும் அளவுக்கு பாட்டி ஒன்றும் முழுநேர நடிகை அல்ல. மேலும் இந்த செய்தியை படித்துவிட்டு நாங்கள் குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தோம் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.






