காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க மாநில கட்சிகளுடன் இணைந்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கியது. இதில், அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, முக ஸ்டாலின் என பல மாநில கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்தனர்.
இந்நிலையில், ஆந்திரா மற்றும் மேங்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக முடிவெடுத்து உள்ளது மாபெரும் அரசியல் திருப்பு முனையாக அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட அம்மாநிலத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் உம்மன்சாண்டி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
மேலும், ஆந்திராவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளிலும், சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்பதால் காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்தில் தனித்து போட்டி இட முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரசுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழும் என்பதால், அங்கும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அகிலேஷ் மற்றும் மாயாவதி அறிவித்ததுடன், அகிலேஷ் மற்றும் மாயாவதி தலா 38 தொகுதிகளை பங்கிட்டு கூட்டணியை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உள்ள சூழ்நிலையில், கர்நாடக, தமிழ்நாடு மட்டுமே காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற தெலுங்கானா, ஆன்ற, மேற்கு வங்காளம், உத்திர பிரதேஷ் மாநிலங்கள் காங்கிரஸ் தனித்து தான் போட்டி என்று முடிவாகியுள்ளது. எனவே மெகா கூட்டணி தற்போது சிறிய கூட்டணியாக மாறியுள்ளது.






